தீபத்தின் ஒளியில் …
……………
ஒளியில் மிளிரும் தீபம் … அதில் மலரும் ஒளி தீப ஒளி !
விழிக்கு இமை போல் ஒளிக்கு தீபம் அன்றோ !….ஒரு தீபம்
தரும் ஒளியில் படிக்கும் பல விழிகள்! …கையில் தீபம் ஏந்தி அது
காட்டும் வழியில் நடக்கும் கால்கள் பல …! கலங்கரை
தீப ஒளி காட்டும் தடத்தில் கரை சேரும் கலங்களும் பலப் பல !
தீபம் சிறிதானாலும் அதன் ஒளி பெரியது ….வலியது !
தீபத்தின் ஒளியில் ஒருவர் காண்பது அவர் வாழ்வின் ஒளிவிளக்கை !
தீபத்தில் பெரிய தீபம் …. இறைவன் படைத்தது …!
என் தீபம் … உன் தீபம் என்று சொந்தம் சொல்ல முடியாத
உலகின் ஒளிவிளக்கு …. கதிரவன் என்னும் ஒரு அற்புத தீபம் !
சொல்லுங்க …இந்த அரிய தீபத்தில் இல்லாத சக்தி எந்த மின் சக்தியில்
இருக்கு ? இறைவன் கொடுக்கும் இந்த தீப ஒளி நம் வீட்டுக்
கூரையில் கிடைக்க ….. “எங்கே என்
மின்சாரம்” என்று அங்கும் இங்கும் நாம் அலைவது ஏன் ?
நம் கையில் வெண்ணெய் இருக்க நெய் தேடி இலக்கு இல்லாமல்
இனியும் நாம் ஓட வேண்டுமா ? சொல்லுங்க …
இறைவன் படைத்த அந்த அற்புத தீப ஒளியின் துணையில் நல்லதொரு
வழி தேடுவோம் இன்றே ! “இல்லை இனிமேல் மின் பற்றாக்குறை “
என்ற ஒரு இனிய விடியலுக்கும் போடுவோம் பாதை உடனே !
Natarajan….. My Kavithai in http://www.dinamani.com on 23 May 2016
Advertisements