” நீ திருப்பாவை படித்தாய் …கண்ணன் உனக்கு கணவன் …” !!!

 

நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,”

13442188_1273387012679287_8859585920371746160_n

காஞ்சிப்பெரியவருக்கு 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன் என்பவர் கூறிய தகவல் நம்மை பரவசமடைய செய்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன், ஒரு கார்த்திகை மாதத்தில் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஒரு தம்பதி தங்கள் மகளுடன் காஞ்சிபுரம் வந்தனர். மகாபெரியவரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் முறை வந்ததும் அந்த குடும்பத்தினர் பெரியவருக்கு நமஸ்காரம் செய்தனர்.

அவரைப் பார்த்து தயக்கத்துடன் நின்ற குடும்பத்தலைவரிடம், “என்ன விஷயம்?” என்று பெரியவர் கேட்டார்.

“பெரியவா! இவள் எங்களுக்கு ஒரே மகள். இவளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. தாங்கள் அனுக்கிரகம் செய்து, திருமணம் விரைவில் நடக்க ஆசி வழங்க வேண்டும்,” என்றார் குடும்பத்தலைவர்.

பெரியவர் அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்ன?” என்றார்.

“ராதா’ என்றாள் அவள்.

பெரியவர் அவளிடம், “உங்கள் ஊரில் பெருமாள் கோவில், சிவன் கோவிலெல்லாம் இருக்கிறதா?” என்றார்.

“ஆம்’ என்றாள் அவள்.

“சரி…அடுத்த மாதம் மார்கழி. தினமும் அதிகாலையில் நீராடிய பிறகு வீட்டு வாசலில் கோலம் போடு. பெருமாள் கோவிலுக்குப் போய் திருப்பாவை பாடு, சிவன் கோவிலுக்கு போய் திருவெம்பாவை பாடு. உனக்கு போக முடியாத நாட்கள் வருமில்லையா! அந்த நாட்களில் வீட்டில் இருந்தே அந்த பாடல்களை பாராயணம் செய்,” என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

ராதாவும் பெரியவர் சொன்னதை தவறாமல் கடைபிடித்தாள். தை மாதம் பிறந்தது. ஒரு நன்னாளில் அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. ராதாவின் பெற்றோர் கதவைத் திறந்தனர்.

வெளியே ஒரு பெரியவரும் அவரது மனைவியும் நின்றனர். அவர்கள் ராதாவைப் பெண் கேட்டு வந்துள்ள விபரம் தெரியவந்தது.

“எங்கள் பூர்வீகம் பாலக்காடு. உங்கள் பெண்ணைப் பற்றி அறிந்தோம். அவள் ஜாதகம் எங்கள் மகன் ஜாதகத்துக்கு பொருத்தமாயிருக்கிறது,” என்றனர்.

திருமணப் பேச்சு நடந்தது. நிச்சயதார்த்த நாள், முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. தை பிறந்ததும் ராதாவுக்கு வழியும் பிறந்து விட்டது.

திருமணத்துக்கு முன்னதாக பெரியவரிடம் ஆசி பெற ராதாவும், அவளது பெற்றோரும் காஞ்சிபுரம் வந்தனர். பெரியவரை அவர்கள் தரிசித்தனர்.

ராதாவிடம், “உன் பெயர் ராதா தானே! உனக்கு வரப்போகும் ஆத்துக்காரர் பெயர் என்ன?” என்று கேட்டார்.

“கண்ணன்” என்ற ராதாவிடம், “உன் மாமனார் பெயர் பரமேஸ்வரனா?” என்றார்.

“ஆம்…என்றாள் ராதா ஆச்சரியமாய்.

“மாமனார் பெயர் பெரியவருக்கு எப்படி தெரிந்தது?’ என்று அவள் ஆச்சரியப்பட்ட வேளையில், “நீ திருப்பாவை படித்தாய், கண்ணன் கணவனாக வருகிறான். திருவெம்பாவை படித்தாய், பரமேஸ்வரன் மாமனராக வருகிறார்,” என்றார்.

இதைக் கேட்ட எல்லாருமே அதிசயித்துப் போனார்கள். முக்காலமும் உணர்ந்த ஞானிக்கு இவர்கள் பெயர் தெரியாதா என்ன? !!!

 

Source ….facebook input

Natarajan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s