வாரம் ஒரு கவிதை….” எப்படி மறப்பேன் …” ?

Brother-Anslem

எப்படி மறப்பேன் ?
………………
அன்பும்  அறிவும் பண்புடன் பாசமும்
 ஒன்றுக்கு  ஒன்று குறையாமல்
 என்றும் உன் மாணவன்   வாழ்வில் இருக்க
 அன்றே வழி காட்டிய ஆசான்  அய்யா  நீ !
 எப்படி மறப்பேன் நீ காட்டிய வழியை நான் ?
 பள்ளி கணக்கில் கூட்டலும் கழித்தலும் உண்டு
 ஆனால் நன்னெறி வாழ்க்கைக்   கணக்கில் கூட்டலும்
  பெருக்கலும்  மட்டுமே என்று   சொன்னவன் அய்யா நீ !
 உன் மாணவன் நான் …இன்றும் உன் மாணவன்தான் !
 எப்படி  மறப்பேன்  உன் பாடத்தை  நான் ?
 தமிழ் செய்யுள் பாடம் படிக்கும் நேரம்  …செய்ய முடியும்
 செய்யுள் ஒன்று உன்னாலும்  என்று சொல்லி நாலடி
 கவிதை பல என்னை எழுத வைத்து நீயும் நல்ல கவிஞன் ஆவாய்
 ஒருநாள் என்று நீ சொன்ன சமயம் விண்ணில் பறந்தேனே  நான் !
 எப்படி  மறப்பேன் உன்னை  நான் இன்று ?
 தினம் ஒரு திருக்குறள் கரும்பலகையில் எழுதி வாழ்க்கையின்
 நியதி என்னவென்று  உன் மாணவர்கள் மனதில் பதிய வைத்த
 ஒரு நல்ல ஆசிரியர்  நீ …இன்றும்  அதுவே என் வாழ்வின் மந்திரம் !
 எப்படி மறப்பேன் நான் என் வாழ்வை சிறக்க வைத்த உன்னை ?
Natarajan
My Kavithai published in http://www.dinamani.com  on 27th June 2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s