வாரம் ஒரு கவிதை….” வாழ்க்கையின் தூரங்கள் ” !!!

 

வாழ்க்கையின்  தூரங்கள் …
……………………
வாழ்க்கை பயணத்தில் நீ   தாண்டும் ஒவ்வொரு படியும்  ஒரு
ஒரு மைல்  கல்லே !
பாரம் சுமையாகாத நேரம் உன்  பயணம்  சுவைக்கும் !… பயணிக்கும்
தூரமும் இனிக்கும் ! இது வரை
கடந்து வந்த தூரம் கணக்கிடும் உனக்கு   இனிமேல் கடக்க இருக்கும்
தூரம் என்ன என்று  தெரியுமா ?
வானத்தின் எல்லை என்ன என்று கணக்கிட்டு சொல்லும் நீ   உன்
வாழ்வின் தூரம்  எது வரை என்று சொல்ல முடியுமா ?
புரிந்து கொள் தம்பி நீ … காலமும்  நேரமும் கடந்து விட்டால் அது
திரும்பி  வராத  ஒரு பொக்கிஷம் என்று !
காலம் என்பது இறைவன்  உனக்கு கொடுத்த எழுதுகோல் …இந்த
எழுதுகோலில்  நீ எழுதியது எதையும் மாற்றி எழுத  ஒரு அழிப்பான்
இல்லை உன்னிடம் ! மறக்க வேண்டாம் நீ இதை !
காலத்தின் எழுதுகோலில் நீ எழுதும் ஒரு ஒரு எழுத்தும் காலத்தால்
அழியாத பொன்னெழுத்தாகட்டும் …நீ கடந்து வந்த வழித்தடம்
சொல்லட்டும் உன் புகழ் என்றென்றும் !
எத்தனை தூரம் நீ  கடந்து  வந்தாய் என்பது செய்தி அல்ல !
நீ நடந்து வந்த பாதை சொல்லும் செய்தி என்ன என்பதே செய்தி !
தூரத்தை கணக்கிட வேண்டாம் நீ …நேரத்தைக் கணக்கிடு  தம்பி !
இன்றே  செய் …அதுவும்  நன்றே செய் !
நடராஜன்
Tamil kavithai  of mine appeared in http://www.dinamani.com on 18 july 2016
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s