பணத்தின் மறுபக்கம் …
…………………….
செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்!
தன் மதிப்பு இழந்த பணம் வெற்று காகிதமானதே ஒரே நாளில் !
நன் மதிப்புடன் வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள்
இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும் சோகம்
பார்த்து மனம் கலங்கியதுண்டு நான் ! ஒரே ஒரு
வரியால் தன் மதிப்பை இழக்கும் வரை பணத்துக்கும்
தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று …!
பணத்தின் மறுபக்கம் என்ன என்று பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும்
அவன் வாழ்வின் மதிப்பு அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
Natarajan
7th Dec 2016