வாரம் ஒரு கவிதை …” நீதியைத் தேடி …” !!!

 

நீதியைத் தேடி …
——————
 ஒரு நதியின் நீருக்காக நீதி  தேடி ஓடிய எங்கள்
 ஓட்டம் ஒயவில்லயே இன்னும் ! மீண்டும் ஒரு
 ஓட்டம் ..நாங்கள் ஓடுகிறோம் உன்னைத்
 தேடி நீதி தேவதையே ! இந்த ஓட்டம்
 எங்கள் நாட்டு மாட்டின் ஓட்டத்தைத்
 தடுக்க நினைக்கும் ஒரு கூட்டத்தின்
 கொட்டம் அடக்க !…ஒரே குரலில்
 கேட்கிறோம் ஒன்றே ஒன்று மட்டும்
 உன்னிடம் நீதி தேவதையே !
 “இழைக்கப்பட்ட அநீதி அழிக்கப்பட்டால்
  கிட்டும் ஒரு சரியான நீதி எங்களுக்கு “
 நீதி தேடி மீண்டும் உன் கதவு தட்டும்
 காலம் இனி வேண்டவே வேண்டாம்
 எங்களுக்கு நீதி தேவதையே !
 நம்புகிறோம் நாங்கள் உன்னை !
 வெல்வது நீயாக இருக்கட்டும் ..உன்
 வெற்றியில் தழைத்து செழிப்பது எங்கள்
 நாட்டுக் காளை இனமாகட்டும் ! எங்கள்
 ஆவினம் குலம் தழைக்க நீ பெறும் வெற்றி
 எங்கள் தமிழ் தாய்  உள்ளம் குளிரும் வெற்றி !
 நீதி தேடி நாங்கள் ஓடியது   போதும் ! நியாயம்
 இருக்கும் இடம் தேடி நீ ஓடி வா நீதி தேவதையே !
K.Natarajan
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s