இந்த வாரக் கவிதை ….” விடுதலை “

 

விடுதலை
———–
சும்மாவா கிடைத்தது விடுதலை நம் நாட்டுக்கு ?
விடுதலைக்கு வித்திட்டு அறப்போர் நடத்திய
நம் முன்னோர் பலர் சுதந்திரக் காற்றை
சுவாசிக்காமலே மறைந்தது சோகம் !
இன்று சுதந்திரக் காற்று சுவாசிக்கும்
நம்மில் பலர் நம் விடுதலை போராட்ட
வரலாறு மறந்ததும் வேதனை …வேதனை !
நம் முன்னோர் நமக்கு பெற்று தந்தார் நம்ம நாட்டு
விடுதலை ! விடுதலை கிடைத்த மகிழ்ச்சிக்
களிப்பில்  நாம் இது வரை  திளைத்தது போதும் ! இனி
விதிவிலக்கு  ஏதும் இல்லாத  ஒரு விதிமுறை மாற்றம் நம்
மண்ணில் அரும்ப நாம்  விதைக்க வேண்டும் ஒரு வித்து
நம் மண்ணில் ! வளரும்  தலைமுறைக்கு நாம் போராடி
பெற்று தர வேண்டும் மீண்டும் ஒரு விடுதலை! … நம்
மண்ணுக்கு வேண்டும் விடுதலை… ஊழல்
சாம்ராஜ்ய அரசியலில் இருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை… சாதி மத
பேத அரசியல் ஆதிக்கத்திலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை …
கண்ணென போற்றும் கல்வியை காசாக்கும்
நாசக்  கயவர் பிடியிலிருந்து !
நம் மண்ணுக்கு வேண்டும் விடுதலை …
இன மதவாத தீவிரவாத கூட்டத்தின்
மிரட்டலிலிருந்து !
எடுப்போம் சபதம் நாம் இன்று …
தொடுப்போம் ஒரு அறப்போர் மீண்டும் !
எதிர்வரும் தலைமுறைக்கு நாம் மாற்றிக்
கொடுப்போம்   ஒரு புதிய பாரத தேசத்தை !
விடுதலையின் புது விளக்கம் வரும்
தலைமுறைக்கு பழக்கமாக மாறட்டும் !
விடியட்டும் ஒரு புதிய காலை! நம்
வளரும் தலை முறை சுவாசிக்கட்டும் மாசில்லா
புதிய  விடியல் காற்றை ஒரு தடையும் இல்லாமல் !
My Kavithai as published in http://www.dinamani.com
Natarajan
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s