வாரம் ஒரு கவிதை…” வீர மங்கை “

 

வீர மங்கை
———–
முறம் கொண்டு விரட்டினாள் ஒரு புலியை  அன்று
வீர மங்கை ஒருத்தி …புலி புற முதுகு காட்டி ஓடியது
முறம் பார்த்து அல்ல !… முறம் பிடித்த
மங்கையின் முகம் பார்த்து ! மங்கையரின்
வீரம் தெரியும் அவர் முகத்தில் …செயலில் ! விண்வெளியில்
பயணித்த முதல் பெண்ணும்   அந்த விண்ணுக்கு
விண்கோள் ஏவும்  நம் பெண்மணிகள் வரை
ஒரு ஒரு மங்கையும் வீர மங்கையே !
இல்லறத்தை ஒரு நல்லறமாக உருவாக்கி
நல்ல ஒரு சந்ததியை இந்த உலகுக்கு
கொடுக்கும் ஒரு ஒரு இல்லாளும்
ஒரு வீர மங்கையே !  வீர தீர செயல்
தேவையில்லை ஒரு பெண்ணுக்கு   வீர மங்கை பட்டம் பெற !
தன் கண் முன்னே கருகும் பயிர் கண்டும்
தான் வாடாமல் தன் பிள்ளைக்கும் தன்
குடும்பத்துக்கும் அரை வயிற்று கஞ்சி
கொடுக்கும் ஒரு உழவனின் இல்லாள்
ஒரு வீர மங்கையே !
படிப்பு வாசனையே இல்லாமல் ஒரு
குடிகார கணவனுடன்  குடும்பம் நடத்தி
தான் பெற்ற குழந்தைகளை இந்த அவையத்து
முந்தி இருக்க செய்யும் இலக்கில்  நாளும் உழைக்கும்
ஒரு ஒரு தாயும்  வீர மங்கைதான் என்  பார்வையில் !
Natarajan   in http://www.dinamani.com  dated 13th march 2017
Natarajan
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s