சூரிய தாகம்
————–
சுள்ளென்று எரிக்கும் சூரியனின் தாக்கம் தெரியும்
அது என்ன சூரிய தாகம் ? சூரியனுக்கே தாகமா !
இல்லை தாகம், சூரிய வெப்பம் தாக்கும் பூமிக்கா ?
தாகம் பூமிக்கு மட்டும் அல்ல … சூரியனுக்கும் இருக்கு !
மண்ணில் உள்ள நீர் மனிதனுக்கு மட்டுமல்ல சொந்தம் !
விண்ணில் உள்ள மேகத்துக்கும் அதுதானே நீராகாரம் !
மண்ணிலிருந்து நீர் உறிஞ்சி வெண் மேகம் நெய்து
கொடுக்கும் கரு மழை மேக புத்தாடை சூரியனுக்கு
ஒரு பட்டாடை ! கதிரவன் அவன் தாகம் தீர்க்கும்
தண்ணீர் பந்தலும் அதுவே !
விண்ணின் தண்ணீர் பந்தல் அள்ளி வழங்கும்
கொடையே இந்த மண்ணுக்கு துள்ளி வரும் மழை !
மண்ணுக்கு துள்ளி வரும் மழை நீரை வரவேற்க
ஏரி குளம் ஒன்றும் இல்லையே நம் மண்ணில் இன்று !
மண்ணுக்கு குடை பிடித்து கருமேக மழைப்
பொழிவை வழி காட்டி வரவேற்கும் மரம்,
கானகமும் கண்ணில் படவில்லையே இன்று !
வரிசை கட்டி வானம் தொடும் கட்டிடங்கள்தான்
தெரியுது கண்ணுக்கு எட்டும் தூரம் மட்டும் !
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ! ஏரி குளம்
அருமை புரிந்து நம் மண்ணின் நீர் வளம்
காப்போம் !
மரம் வளர்த்து நீர் வளம் பெருக்கினால்
தீரும் அந்த சூரிய தாகம் !
சூரிய தாகம் தணிந்தால் தீரும் இந்த மண்ணின்
தண்ணீர் தாகம் தன்னால் !
Natarajan in http://www.dinamani.com dated 17th April 2017
Natarajan
Advertisements
New concept/thinking about Sun’s thirsty|