வாரம் ஒரு கவிதை…” கண்ணால் காண்பதும் …”

 

கண்ணால் காண்பதும் …
——————–
கண்ணால் காண்பதும் பொய் …காதால்
கேட்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய் !
இது சான்றோர் வாக்கு !
பதவியும் பணமும் இருக்கும் வரை உன்னை சுற்றி
ஒரு கூட்டம் இருக்கும் எப்போதும் !…நீ உன் கண்ணால்
பார்த்தாலும்  அந்த கூட்டம் ஒரு பொய் !
நீ உன் காதால் கேட்டாலும் உன் புகழ் பாடும்
அந்த கூட்டத்தின் பாட்டும் ஒரு பொய்தான் !
மயங்கி விடாதே தம்பி  நீ …ஒரு பொய்யின்
அழகில் ! மதி மயங்கி உன்னை இழந்து விடாதே
ஒரு மாய வலையில் சிக்கி !
கண் கொண்டு எதை நீ பார்த்தாலும் , உன்
காதால் எதை நீ கேட்டாலும்
உன் கண்ணுக்கு தெரியாத உன் மனம் மட்டும்
சொல்லும் நீ செய்வது சரியா இல்லை தவறா என்று !
உன் மனது சொல்லும் வாக்கே மெய் வாக்கு !
கண்ணுக்கு தெரியாத உன் மனத்தின் மெய் வாக்கை
நீ காது கொடுத்து கேட்கவேண்டும் தம்பி …
கேட்டு உன் மனம் காட்டும் நல் வழியில் நீ நடந்தால்
கூட்டத்தில் ஒருவனாய் நீ இருக்க மாட்டாய் தம்பி !
உன் வீட்டையும்  நாட்டையும் நல்  வழி நடத்தும்
ஒரு நல்ல தலைவனாய் நீ மிளிர்வாய்  தம்பி !
உன் மனம் சொல்லும் மெய் வாக்கு  கேட்டு  நீ நடந்தால்
நீ சொல்லும் ஓவ்வொரு சொல்லும் ஒரு
வேத வாக்கு …அதுவே உன் செல்வாக்கு !
K.Natarajan
as appeared in http://www.dinamani.com dated 27th august 2017
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s