புதிய ஓட்டம்
—————
ஓட்டமாய் ஓடுது வாழ்க்கை …தினம் தினம்
ஒரு ஓட்டம் …புதிய ஓட்டம் !
என் தாத்தாவின் கை பிடித்து ஓடிய நான்
இன்று என் பேரனின் பின்னால் ஓடுகிறேன் !
பேரன் குரல் கேட்டு ஓடுகிறேன் அவன்
சொல்லும்படி ஆடுகிறேன் … இது புதிய
ஆட்டம் நான் ஓடும் ஓட்டத்தில் !
இந்த புதிய ஓட்டமும் ஆட்டமும் சலிக்கவில்லையே
எனக்கு…தினம் தினம் நான் புதியதாய் பிறப்பதால் !
புதிய ரத்தம் என்னுள்ளே புது வேகத்தில் சுரப்பதால் !
புதிய ஓட்டம் ஓடும் நான் ஒரு வட்டத்துக்குள் சுற்றவில்லை
குட்டிப் பயல் என்னை கட்டிப் போடவும் இல்லை !
நான் ஓடிக் கொண்டே இருப்பேன் அவன் பின்னால் !
என் ஓட்டம் நிற்காது அந்த சுட்டிப் பயல் ஒரு
சிகரத்தை எட்டி தொடும் வரையில் !
My Tamil Kavithai in http://www.dinamani.com dated 1st Oct 2017
Natarajan