வாரம் ஒரு கவிதை…” தீ தின்ற உயிர் “

 

தீ தின்ற உயிர்
—————-
மகனே நீ உண்ணும் உணவு மணக்க.. தீ நான்
என் உயிர் கொடுக்கிறேன் தினமும் !
நீ உயிர் வாழ என் உயிர் தேவை உனக்கு நாளும் !
நான் உயிர் பிழைக்க நீ எதற்கு எனக்கு ?
மகனே … நீ ஏற்றி வைத்திருக்கிறாயே   சாதி மதத் தீ
அது … உன் அரசியல்  விளையாட்டில் நீ குளிர் காய !
பெட்டி பெட்டியாய் நீ பணம் சேர்க்க வட்டிக்கு
வட்டி , வட்டி மேல் வட்டி  என்னும் கந்து வட்டி
தீயும் நீ ஏற்றி வளர்க்கும் தீயே !  ஆனால்
மகனே ..கந்து வட்டி தீ ஒரு ஆட்கொல்லி தீ !
சாதி மத பேதம் இல்லாத கந்து வட்டி  கலாச்சாரம்
வட்டிக்கு கடன் வாங்கிய பலரை  உன் முன்னால்
முட்டி போட வைக்கும் … தட்டி கேட்க முடியாது உன்னை !
வட்டி கட்ட முடியாமல் புழுங்கி புகைந்து துடிக்கும்
ஒரு ஏழையின் குடும்பத்தை துடிக்க துடிக்க
பொசுக்குமே  உன் கந்து வட்டி தீ !
அவர் உயிரைப் பறித்து தின்றது உன்னுள் எரியும்
பணம் பணம் என்னும் பேராசை  தீ !
உன் பேராசை தீ தின்ற உயிரை,…  அக்னி நான்
தின்றேன் என்று மாற்றி சொல்லி விடாதே
மனிதா !
My Kavithai as appeared in http://www.dinamani.com dated 29th Oct 2017
Natarajan
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s