வாரம் ஒரு கவிதை….” என் முதல் கனவு “

 

என் முதல் கனவு
—————
அம்மாவின் கருவறையில் நான் கேட்ட முதல் ஒலி
அம்மாவின் குரலும் பாட்டும் …இதுதான் உன் அம்மா
என்று என் அம்மாவின்  முகத்தை என் மனத்
திரையில் படம் பிடித்துக் காட்டியது
என் முதல்  கனவே ..அதுவே  நான்
பார்த்த முதல் ஒலியும் ஒளியும் !
நான் கண்ட அந்த முதல் கனவு  நனவு ஆனது என்
அம்மாவின் முகம் நான் பார்த்த முதல் நாள் !
வாழ்வில் எத்தனை எத்தனை கனவுகள் !
கனவு அத்தனையும் நனவாகவில்லையே !
அத்தனை ஏன் ?  நேற்று இரவு கண்ட
கனவு என்ன என்று விடிந்தால் புரிவதில்லையே !
என் முதல் கனவு மட்டும் எனக்கு இன்னும்
மறக்க வில்லையே !  ஏன் ?
அது எனக்கு முதல் கனவு மட்டும் அல்ல !
நனவை கனவில் அடையாளம் காட்டிய
இனிய புதுமைக் கனவும் அதுவே !
இன்றும் என்றும் அதுவே எனக்கு
முதல் கனவு ! முடிவே இல்லாத
முதன்மை கனவும் அதுவே !
My Kavithai  in http://www.dinamani.com dated 26th Nov 2017
Natarajan

2 thoughts on “வாரம் ஒரு கவிதை….” என் முதல் கனவு “

  1. Ramakrishnan December 1, 2017 / 5:02 am

    Super

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s