வாரம் ஒரு கவிதை….. ” மனத்திற்கிட்ட கட்டளை “

மனத்திற்கிட்ட கட்டளை
———————
நான் சொல்வதை  கேள் நீ …அலையாதே இங்கும் அங்கும்
இட்டேன் கட்டளை நான் என் மனதுக்கு !
யாருக்கு யார் கட்டளை இடுவது ? கேட்டது என் மனம் !
அலைவதே என் வேலை …வேலை நிறுத்தம் நான் செய்தால்
நீ ஒரு ஜடம் ! தெரியுமா உனக்கு …சொன்னது மனம் !
நான் போகும்  போக்கில் எல்லாம் நீ போக மட்டும்
நினைக்காதே …இதை மட்டும் நினைவில் வை நீ மனிதா !
மனம் நான் அறிவேன் நீ எந்த வழியில் பயணம் செய்ய
வேண்டும் என்று …இடுவேன்  கட்டளை உனக்கு
நான் அடிக்கடி ! நடக்கவேண்டும் நீ என் சொல்படி !
மறக்க வேண்டாம் மனிதா நீ … நான் உனக்கிடும்
கட்டளை எல்லாம் அந்த இறைவன் உன்
மனத்திற்கிட்ட கட்டளையே !
Natarajan  in http://www.dinamani.com dated 17th DEC 2017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s