வாரம் ஒரு கவிதை….” கொண்டாடப்படும் தினங்கள் “

கொண்டாடப் படும் தினங்கள்
—————————-
இன்று பிறந்த நாள் ….நாளை திருமண  நாள்
நாளை மறு நாள் குழந்தை  பிறந்த நாள் !
பணம் படைத்த அவனுக்கு தேவை ஒரு காரணம்
ஒரு நாளைக் கொண்டாட … அவன் செல்வாக்கை
பறை சாற்ற ! இல்லா விட்டால் அவன் ஒரு
செல்லாக் காசு  அவன் சமூகத்தில் !
தினம் தினம் கொண்டாட்டம்தான் அவன் வீட்டில் !
தினம் தினம் ஒரு வேளை சோற்றுக்கே
திண்டாட்டம் இன்னொருவன் வீட்டில் !
வயிறார அவன் சாப்பிடும் தினம் மட்டுமே
அவனுக்கு கொண்டாட்ட தினம் !
இல்லாதவனும்  கொண்டாடும் தினமாக
இருக்க வேண்டும்  ஒவ்வொரு நாளும் !
இல்லை இனிமேல் திண்டாட்டம் ஒருவருக்கும்
இங்கே என்னும் நல்ல நாள் வர வேண்டும் என் நாட்டில் !
திண்டாட்டம் இல்லா கொண்டாட்டம் எல்லா
நாளும் இருந்து  விட்டால் எந்த ஒரு நாளை
கொண்டாட்ட  தினம் என்று சொல்வோம் நாம் ?
Natarajan  in http://www.dinamani.com dated 25th Dec2017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s