வாரம் ஒரு கவிதை… ” தனிமையோடு பேசுங்கள் “

தனிமையோடு பேசுங்கள்
————————–
தனியாக பேசி தெருவில் நடந்தால் அவரை
ஒரு மாதிரி பார்த்த காலம் இருந்தது  தம்பி !
கைபேசி காலம் இன்று.. கைபேசியில்
பேசாமல் நடந்தால்தான் செய்தி இன்று !
இது காலத்தின் கோலம் … அலை பேசி
அழைத்தால் தனி இடம் தேடி பேச ஓடும்
நீ தனியாக பேச நினைப்பதில் தவறு இல்லை
தம்பி ..!.
தனியாகப் பேசும் நீ தனிமையை நேசிக்கவும்
வேண்டும் …தனிமையில் யோசிக்கவும் வேண்டும் !
தனிமை இனிமை என்று சொல்லவில்லை நான்
தனிமை ஒன்றுதான் வாழ்வின் உண்மை  என்பது
என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை !
உண்மை இது உணர்ந்து உன் மனதோடு  நீ பேசு
எப்போதும் … உன் மனதும் உனக்கு சொல்லும்
உண்மை என்ன என்று, நீ தனிமையில் யோசிக்கும்
போதும் …தனிமையோடு பேசும்போதும் !
உண்மை இது நீ உணர்ந்தால் உன் பேச்சில்
இனிமை இருக்கும் …பிறரை மதிக்கும் தன்மை
இருக்கும் … பெற்றோர் உற்றோரின் தனிமை நீ
தவிர்க்க  நல்ல வழியும் உனக்கு எளிதில் புரியும் !
தனியாக யோசி.. பேசு தனிமையில்  உன் மனசோடு !
நீ ஒரு தனி மரம் அல்ல … குடும்பம் என்னும்
தோப்பில் நீ ஒரு சிறு மரம்   என்னும் உண்மை
உனக்கு புரியும் ! உன் தன்னம்பிக்கையும் வளரும்
தன்னால் !
நீ ஒரு சிறு மரமானாலும் உன் நிழலில் வளரும்
சிறு செடிக்கு நீதான் போதி மரம் என்னும் உண்மையையும்
மறக்க வேண்டாம் நீ !
 in http://www.dinamani.com dated 11th Feb 2018
Natarajan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s