வாரம் ஒரு கவிதை …” சமூக குற்றம் “

 

சமூக குற்றம்
————–
அடுக்கடுக்காய் அதிர்வலைகள் … நெஞ்சத்தை
நொறுக்கும் தொடர்கதைகள் … தினம் தினம் !
காஷ்மீரத்துக் குட்டி தேவதை அவள் வீட்டு
தோட்டத்தில் விளையாடும் நேரம்  அவளை வளைத்து
வதைத்து ,சிதைத்து விட்டதே ஒரு வெறி நாய் கூட்டம் !
பதறுதே மனம் அந்த பிஞ்சு முகம் பார்த்து !
குற்றப் பதிவும் விசாரணையும் தேவையா
அந்த கயவர்  செயலுக்கு ?
மனிதன் செய்யும் தவறுக்குதான் விசாரணையும்
தண்டனையும் நீதி மன்றத்தில் !
ஏதும் அறிய ஒரு இளம் பிஞ்சை வதைத்து
சிதைத்த இந்த மிருக கும்பலுக்கு எதற்கு
மனித விசாரணை ?
அடைக்க வேண்டாமா  அந்த கும்பலை
உயிருடன் ஒரு மிருகத்தின் கூண்டுக்குள் ?
அடி பட்டு வதை பட்டு  சிதைய வேண்டாமா
அந்த வெறி நாய் கூட்டம் ?
சரியான தண்டனை அதுதான் அந்த மிருகக்
கூட்டம் செய்த குற்றத்துக்கு !  அப்படி ஒரு
சட்டம் வேண்டும் என்று நாம் குரல் கொடுப்போம்
இன்று … வந்து விட்டது அதற்கும்  நேரம் !
குரல் கொடுக்க இப்போது நாம் மறந்தால் ,
மறுத்தால் … குற்றவாளிதான் நாமும் !
“சமூக குற்றவாளி” …!
நம் குழந்தைகளும் மன்னிக்க மாட்டார்
சமூக குற்றவாளி நம்மை !
Natarajan
in http://www.dinamani.com  dated  22nd April 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s