வாரம் ஒரு கவிதை ….” நீ கண் சிமிட்டினால் …”

நீ கண் சிமிட்டினால் …
———————-
கண் சிமிட்டும் நேரத்தில் மின்னஞ்சல் பறக்கிறது
கண்டம் விட்டு கண்டம் ! கண்சிமிட்டும் நேரத்தில்
பணப் பரிமாற்றம் நம்  வீட்டிலிருந்தே ! கை பேசி
செய்யுது மாயம் எல்லாம் ! இல்லை என்று
சொல்லவில்லை நான் !
கை பேசி உன்னை கையில் வைத்து வேலை ஏதும்
இல்லாமல் கண் சிமிட்டாமல் உன்னையே
வெறித்து பார்க்குதே  ஒரு கூட்டம் !
அவர் வீட்டு குழந்தை அவரைப் பார்த்து
கண் சிமிட்டி சிரிக்கும் சமயம் கூட
இல்லையே சிரிப்பு அவர் முகத்தில் !
ஆனால் கைபேசி நீ கண் சிமிட்டினால் மட்டும்
வருதே சிரிப்பு அவர் முகத்தில் !
அது என்ன மாயம் ? !!!
Natarajan
in http://www.dinamani.com dated  30th April  2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s