வாரம் ஒரு கவிதை ….” கருவில் தொலைந்த குழந்தை “

கருவில் தொலைந்த குழந்தை
——————————
கவிதை ஒன்று  எழுத நல்ல
கரு ஒன்று தேடினேன் நான்
சுறு சுறுப்பாக !
விறு விறு என்று எழுதி தள்ளினேன்
பக்கம் பக்கமாக !
ஒரு கரு அல்ல ..ஒரு நூறு
கரு என் கவிதைக்கு போட்டது
அடித்தளம் !
எதுகையும் மோனையும் கோர்த்ததா
கை என் கவிதையில் ? இல்லையே !
என் கவிதை எனக்கே புரியாத
விடுகதை ஆனதே !
தேடித் தேடி கருவை விதைத்தும்
உருவாகவில்லையே ஒரு நல்ல
கவிதை!
கருவிலே தொலைந்த குழந்தை
போல ஆனதே என் கவிதை !
நல்ல கரு ஒன்று தேடுகிறேன்
மீண்டும் நான் ! கருவிலே தொலையாமல்
இந்த  புது கவிதை என் மடியில் கொஞ்சி
விளையாட வேண்டும் ஒரு குழந்தை போல !
Natarajan
7th May 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s