வாரம் ஒரு கவிதை ….: ” என்றும் என் இதயத்தில் ….”

என்றும் என் இதயத்தில் …
————————-
என் இதயம் வலித்தது …ரொம்ப
வலிக்கிறதா மகனே …கேட்டாள்
என் அம்மா என் இதயத்தில் உள்ளே
இருந்து !
இல்லை அம்மா …பரவாயில்லை
இப்போ …சொன்னேன்  நான் !
இல்லை …இல்லை … வலி நீ
பொறுக்க  மாட்டாய் !..உடனே
செய்து கொள் இதய அறுவை சிகிச்சை
மகனே !  நான் இருப்பேன் உன் கூட
என்றாள்  என் அம்மா !
இல்லை அம்மா … இதய அறுவை
சிகிச்சை வேண்டாம் எனக்கு !
நீ குடி இருக்கும் என்   இதயத்தை அறுக்க
விட மாட்டேன்  நான் ! சொன்னேன் நான் !
என்றும் என் இதயத்தில் அம்மா  நீ
இருக்கும் போது எனக்கு என்ன
கவலை அம்மா ?
எதையும் தாங்கும் இதயம் எனக்கு
நீ கொடுத்த பரிசு அம்மா ! இந்த
வலி மட்டும் அல்ல … வேறு எந்த
வலியையும் நீ குடி இருக்கும் என்
இதயம் தாங்கும்  அம்மா !
என்றும் என் இதயத்தில் அம்மா நீ
இருந்தால் அது போதும் எனக்கு
அம்மா !
Natarajan  in http://www.dinamani.com dated  27th May  2018
Natarajan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s