வாரம் ஒரு கவிதை….” வாழ்க்கையெனும் போர்க்களம் “

வாழ்க்கையெனும் போர்க்களம்
………………………..
குழந்தை ஒன்று வீட்டில் பிறக்கையில்
ஒரே அமர்க்களம் அந்த வீட்டில் !
குழந்தை தவழ்ந்து ஓடி விளையாடும்
தருணம் விளையாட்டு தளம் ஒன்று
உருவாகுது அதே வீட்டில் !
விளையாட்டு போல நாட்கள் கடந்து
அந்த குழந்தைக்கும் ஓரு குழந்தை
பிறக்கும் நேரம் மீண்டும் அதே
அமர்க்களம் அந்த வீட்டில் !
அமர்க்களமாக ஆரம்பிக்கும் ஒரு
“குழந்தையின்” வாழ்க்கை என்றுமே
ஒரு விளையாட்டுதான் …விதி என்று
ஒன்று நடுவில் விளையாடாமல் இருந்தால் !
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும்
சகஜம் என்று புரிந்தால் விதியின் விளையாட்டும்
வாழ்வின் சிகரம் தொட கிடைத்த ஒரு
ஒரு படி கல்லே என்ற உண்மையும்
தன்னால் புரியும் எந்த ” குழந்தைக்கும் ” !
வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று
புரிந்தால் போர்க்களம் ஆகாது வாழ்க்கை
K.Natarajan
in http://www.dinamani.com dated 2nd June 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s