வாரம் ஓரு கவிதை…. ” வெல்லும் சொல் “

வெல்லும் சொல் …
——————-
சொல்லலாம் எதையும் …சொல்வதை
செய்து காட்டவும் வேண்டும் தம்பி !
வெல்லலாம் எவரையும் வெறும்
வாய்ப் பேச்சால் என்று நினைப்பது
மணலில் வீடு கட்டி அதை விற்க
நினைப்பது போல !
செய்வதை மட்டும்  நீ சொல் …தம்பி !
சொன்னதை செய்தும்  காட்டு, உன் சொல்லை
நம்பும் உன் ஊருக்கு !
உன் சொல்வாக்கு …அதுவே
உன் செல்வாக்காக  இருக்க வேண்டும்
தம்பி !
நீ வெல்லலாம் …இல்லை  தோற்கலாம் !
கேள்வி அதுவல்ல !
வெல்வது என்றும் உன் சொல்லாக
இருக்க வேண்டும் தம்பி !
வெல்லும் உன் சொல், வெல்லும்
மற்றவர் இதயத்தையும் என்றும் !
மறவாதே இதை நீ … தம்பி !
நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
வெல்லும் சொல்லாக தன்னால்
மாறும் அப்போது !
K.Natarajan
in http://www.dinamani.com dated 11th June 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s