வாரம் ஒரு கவிதை….” மிச்சத்தை மீட்போம் …”

மிச்சத்தை  மீட்போம்
———————-
அடுக்கு மாடி கட்டிட மாயையில்
விளை நிலம் விலை போனது !
விரல் சொடுக்கி வீட்டில் இருந்தே
குரல் கொடுத்து அதன் விலை
என்ன என்றே தெரியாமல்
“ஆன் லைன்” வர்த்தகம் செய்வதில்
நமக்கு ஒரு பெருமை !
எது வாங்குகிறோம் ,எதற்கு
வாங்கு கிறோம்,  கொடுக்கும் விலை
சரிதானா அதற்கு … பார்க்க
நேரமில்லை நமக்கு!.
பட்டியல் இட்டு கணினியில் தெரியும்
மொத்த பணத்துக்கும் ஒரு அட்டை
எண் மட்டும் தேவை நமக்கு !
அயல் நாட்டு வர்த்தக மோகத்தில்
நம் நாட்டின் சிறு ,குறு வர்த்தகம்
சீர் குலைய வழி காட்டி விட்டோம் நாம் !
நம் நாட்டின் பாரம்பரிய அருமையும்
தெரியவில்லை நமக்கு …சொல்லியும்
தரவில்லை நாம் அதை  நம் பிள்ளைகளுக்கு !
யோகா முதல் பிள்ளையாருக்கு போடும்
தோப்புக்கரணம் வரை அதன் அருமை
பெருமை என்ன என்றே நமக்கு தெரியாது
வேறு ஒரு நாட்டுக்காரன் அதன் அருமை பெருமை
என்ன என்று நமக்கு சொல்லும் வரை !
தொலைத்து விட்டோம் நம் நாட்டின்
மாணிக்க கற்களை  வெறும் கற்கள்
என்று நினைத்து !
எஞ்சி இருப்பதை ஒரு துச்சமாக
நினைக்காமல் மிச்சம் இருப்பதையாவது
மதித்து மீட்டு எடுத்து கொடுப்போம்
நம் பிள்ளைகளுக்கு மறக்காமல் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  18th June 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s