வாரம் ஒரு கவிதை…. ” முதல் தனிமை “

முதல் தனிமை …
—————-
தாயின் கருவில் ஒரு குழந்தையின் தனிமை
முதல் தனிமை !  மண்ணில் பிறந்த பின்
உறவுகள் பல உருவாகும் …கருவறையின்
தனிமையும்  மறந்து போகும் சிறகடித்துப்
பறக்கும் காலத்தின் கோலத்தில் !
ஓய்வில்லா வாழ்வில் தனிமையும்
இனிக்கும் பல நேரம் !  இனித்த
தனிமையும் கசக்கும்  சில நாளில் !
நான் , எனது  என்னும் சொல்லில்
அர்த்தம் எதுவும் இல்லை  என்னும்
பாடம் சொல்ல ஆரம்பிக்கும்.. தனிமை !
தனிமை சொல்லும் பாடத்தின் பொருள்
புரியும் நேரம் கை தட்டிக் கூப்பிடும்
மீண்டும் ஒரு கருவறை …கல்லறை உருவில் !
முதல் தனிமை கருவறையில் …முழு
முதல் தனிமை கல்லறையில் !  விதி
இதில் மாற்றம் ஏது ?
Natarajan
1st August 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s