வாரம் ஒரு கவிதை…. ” வாழ்வின் நிஜங்கள் “

வாழ்வின் நிஜங்கள்
——————–
முக நூலில் நட்பு வட்டம் பெரிது… ஆனால்
அகமும் முகமும் மலர்ந்து  சிரிக்கும் அவன் சுற்றமும் நட்பும்
பார்த்து அவன் முகம்  மலர்ந்து சிரிப்பதே அரிது !
இது வாழ்வின் நிஜம் !
நிஜம் நிஜமாக இருக்கையில் நிஜத்தின் அருமை
பெருமை தெரியாமல் இருந்து விட்டு நிஜம்
நிழலாக மாறிய பின்னர் நிழலுக்கு மாலையும்
மரியாதையும் தவறாமல் நடக்கும் தினமும்
இது வாழ்வின் நிஜம் !
நிழலை நிஜம் என்று நம்பி நிஜ வாழ்வை
தொலைத்தவர்  பலர் … இதுவும் வாழ்வின் நிஜம் !
நெறுநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்த இவ்வுலகு என்னும் வள்ளுவன்
வாக்கை மறந்து தான் வாழும் வாழ்வு என்றும்
நிரந்தரம் …சுக போக வாழ்வு அது என் சுதந்திரம் ,!
என்று வாதிப்பர் பலர் …இதுவும் வாழ்வின் நிஜம் !
என் வாழ்க்கை நான் வாழ்வதற்கே என்று நம்பி
நிலையில்லா வாழ்வு என்னும் அலைகடலில்
ஓட்டைப் படகில் துடுப்பும் இன்றி பயணிப்பர்
மெத்தப் படித்த புத்திசாலிகள் சிலர் !
இதுவும் வாழ்வின் நிஜத்தில் ஒன்று !
நிழல் எது  நிஜம் எது என்று தெரியாமலே
நிழலை நிஜமாகவும் நிஜத்தை நிழலாகவும்
நினைத்து வாழ்ந்து முடித்தவரும் பலர் !
வாழ்வின் நிஜம் இதில் நிதர்சனம் !
Natarajan
in http://www.dinamani.com dated 8th August 2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s