வாரம் ஒரு கவிதை…. “அன்பின் வழியது “

அன்பின் வழியது …
—————-
ஐந்தறிவு உயிரினம் பதறி தவிக்குது
தன் குட்டிகளைக் காப்பாற்ற !
அதன் கண்ணில் வழியும் நீர் வெறும்
தண்ணீர் அல்ல அந்த நேரம் … வாய் பேச
முடியாமல் தவித்து அதன் விழி
வழி வரும் நீர்  ரத்தக்கண்ணீர் !
சாவின் பிடியிலிருந்து மீட்டு  தன்
குழந்தைகளை அந்த தாய் உச்சி
முகர்ந்து வருடும் நேரம், வழியும்
ஆனந்தக் கண்ணீர் அதன் விழியில் !
அன்பின் வழி எது  என்று அது
பாடம் கற்றதா என்ன ?
சகலமும் கற்று ஆறு அறிவும்  உள்ள
பெற்ற தாய் ஒருத்தி தன் பிஞ்சுக்
குழந்தைக்கே நஞ்சு வைக்கும் அவலம்
பார்த்து ஐந்தறிவு ஜீவன் எல்லாம்
நடு நடுங்கி ஒதுங்கி நிக்குதாம்
இன்று ஒரு ஓரத்தில் !
ஆறு அறிவு காட்டிய  வழியில்
மறந்தும் தன் ஐந்து அறிவு இனம்
பயணித்து விடக் கூடாது  என்னும்
அதன் நிலையில் மேலும் உறுதியாய்
தன் இனத்தை வழி நடத்துதாம்
அந்த ஐந்தறிவு தாய் இனம் !
Natarajan
13/09/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s