வாரம் ஒரு கவிதை ….” காதலின் வானிலை “

காதலின் வானிலை
==================
வானம் பார்த்து  நிலவு  பார்த்து
இரவில் மின்னும் நட்சத்திரக் கூட்டம்
கண்டு களித்து நான் கொண்ட காதல் அந்த
நீல வானம் மீதுதான் அன்றும் இன்றும்!
ஒரு நாள் கறுக்கும் ,  இடிக்கும், கண்ணீரும்
வடிக்கும்! கோபத்தில் கொந்தளித்து வெள்ளமாய்
உருவெடுத்து தத்தளிக்கவும் வைக்கும்!
மறுநாளே கதிரவன் புன்சிரிப்போடு கரு
மேகத்துக்கு விடை கொடுத்து விரிக்கும்
எனக்கு ஒரு சிகப்பு கம்பளம் நான் ஓடி
விளையாட !
என் தாய் மடியில் அமர்ந்து நான் பார்த்து
ரசித்த அதே நீல வானத்தை நான் இன்று
காட்டுகிறேன் என் பேரனுக்கும் !  அதே
நீல வானம் , அதே நிலவு , அதே விண்மீன்கள் !
முதுமை எனக்கு மட்டுமே … என்  நீல வானக்
காதலிக்கு இல்லை! அந்த நீல வானம் என்றும்
நீல வண்ண முகத்துடனே சிரிக்க வேண்டும்
முதுமையின் சாயல் அதன்மேல் படாமல் !
என் பேரனிடம் சொல்கிறேன் நான் இன்று
இதே நீல மேகத்தை நீ உன் பேரனுக்கும்
காட்டி கதை சொல்லி மகிழ வேண்டும் என்று !
குடிக்கும் தண்ணீருக்கு விலை வைத்து விட்டோம்
பாவிகள் நாங்கள் ! சுவாசிக்கும் காற்றுக்கும்
ஒரு விலை கொடுக்கும் அவலம் நேர வேண்டாம்
உன் காலத்தில் ! பார்த்து நடந்து கொள் தம்பி நீ !
நீல வானம் நீல வானமாகவே இருக்க நான்
உனக்கு தரும்  வானிலை முன் எச்சரிக்கை
இது தம்பி !
Natarajan
in http://www.dinamani.com dated  21/10/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s