வாரம் ஒரு கவிதை ….” மன்னிப்பாயா …”

 

மன்னிப்பாயா …
================
நான் ஆட்சிக்கு வந்தால் ஒழிப்பேன் வறுமையை
என்று சொன்னார் ஒருவர்!  நான் ஆட்சிக்கு
வந்தால் நதி நீரை இணைப்பேன் என்றார்
இன்னொருவர் !
நீதியும் தர்மமும் நிலை நாட்டுவேன் நான்
என்றார் மற்றொருவர் !
பாரினிலே நல்ல நாடாக மாறும் நம் பாரத
நாடு என்று சபதம் செய்தார் வேறு ஒருவர் !
சொன்னதை செய்வேன் ..செய்வதை சொல்வேன்
என்னும் ஒரே ஒரு   வாக்குறுதி  நம்பி என் வாக்கு
யாருக்கு என்று எடுத்தேன் முடிவு அன்று !
ஏமாந்து நிற்கிறேன் இன்று நான் ! மாத சீட்டு
கட்டி, கையில் இருந்த பணத்தையும் முழுதாக
தொலைத்து விட்ட ஒரு சராசரி மனிதனாக !
நண்பா ! நீ அன்றே சொன்னாய் …இலவசத்தில்
மயங்கி உன் வசம் இருப்பதையும் இழந்து
விடாதே நீ என்று !
கேட்டேனா நான் ? இல்லையே ! நான்
கேட்காமலே பல வித அட்டைகள் என்
கையில் இன்று ! கடன்  அட்டைகளும்
என் சட்டைப் பையில் காசுக்கு பதிலாக !
உன் சொல் அன்று கேட்காதது  என்
தப்புதான் …நண்பா !
மன்னிப்பாயா நண்பா  என்னை இன்று ?
Natarajan.K
in http://www.dinamani.com  dated 28/10/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s