வாரம் ஒரு கவிதை …” நாட் குறிப்பு எழுதிய நாட்கள் “

நாட் குறிப்பு எழுதிய நாட்கள்
==========================
நாட்குறிப்பு  நான்  எழுதியதில்லை ஒரு நாளும் !
பின் குறிப்பு மட்டும் இருக்கும் அவசியம் என்
கடிதத்தில் ! அது ஏன் என்று இன்று வரை
தெரியவில்லை  எனக்கு ! …ஆனால்
நாட்காட்டி தாள் தினம் தினம் காலையில் நான்
கிழிக்கும் நேரம் விழித்துக் கொள்கிறேன் ,நான்
கிழிந்த தாள் சொல்லும் குறிப்பு புரிந்து கொண்டு !
ஆம் … புது விடியல் தினமும்  நான் காண
துணை நிற்கும் அந்த ஆண்டவனுக்கு நான்
சொல்ல வேண்டும் நன்றி ஒரு ஆயிரம் !
நாட்காட்டியில் நான் கிழித்தது ஒரு தாளை
மட்டும் அல்ல … என் வாழ்வில் முடிந்து போன
ஒரு நாளையும் சேர்த்துதான் !
நாட்குறிப்பு நான் எழுதா விட்டாலும் என் நாட்காட்டி
சுட்டிக் காட்டுதே என் வாழ்வின் அர்த்தம் என்ன
என்று தினம் தினம் !
என் நாட்காட்டிதான் ஒரு வேளை நான்
எழுதாத என் நாட்குறிப்போ !
K.Natarajan
05/11/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s