வாரம் ஒரு கவிதை… ” நீ என்ன சொல்வது …நான் என்ன கேட்பது …” ?

நீ என்ன சொல்வது …நான் என்ன  கேட்பது  ?
=======================—–==============
உனக்கு சர்க்கரை வியாதி ஆரம்பம்
சர்க்கரை வேண்டாம் உன் உணவில்
இனிமேல் …மருத்துவர் சொன்னார்
சொன்னது யாருக்காக ? சர்க்கரை
நீ சாப்பிடக் கூடாது என்பது அவர்
ஆசையா என்ன ! உன்  நலனுக்கு தானே
சொன்னார் மருத்துவர் !
சொன்ன மருத்துவரை நீ  திட்டினால்
யாருக்கு வேதனை கூடும் ?
புரிய வேண்டும் உனக்கு !
பட்டாசு அதிகம் வெடித்தால் மாசு
படும் நீ சுவாசிக்கும் காற்று !
அளவோடு வெடிக்க வேண்டும் நீ
பட்டாசு என்று சொன்னால் ஏன்
சொன்னார்கள் என்று புரியவில்லையா
உனக்கு ? அவர் என்ன சொல்வது
நான் என்ன கேட்பது என்று விதண்டாவாதம்
நீ செய்தால் வேதனையும் சோதனையும் யாருக்கு ?
உனக்குதானே !
மாசில்லா வானம் வேண்டும், காசு கொடுக்காமல்
காற்று சுவாசிக்கும் காலம் தொடர வேண்டும்
என்றால் வெட்டி ஜம்பத்தை எட்டி உதைத்து விட்டு
மாசு நீக்கும் மருத்துவர் சத்தம்  போட்டு
சொன்ன சட்டம் ஏன் என்று புரிந்து கொள் நீ !
கண் கெட்ட பின் செய்யலாம் சூர்ய நமஸ்காரம்
என்னும் எண்ணத்தை தள்ளு பின்னுக்கு  நீ !
சொன்னதை நீ செய்யா விட்டால் சூரியன் எங்கே
வானத்தில் என்று நீயும் உன் பிள்ளையும் தேடும்
காலமும் நேரமும் நீ பார்க்க நேரிடும் காலம் வெகு
தொலைவில் இல்லை தம்பி !
மதித்து நடந்து கொள் சட்டத்தை …சட்டத்தை
மிதித்து  சத்தத்துடன் வெடி வெடித்தால் நீ மீறுவது
சட்டத்தை மட்டும் அல்ல ! உன் வாழ்வின் பயண
கோட்டையும் சேர்த்துதான் ! உன் செயல் உன்னைக்
கொண்டு சேர்க்கும் உன் வாழ்வின் இறுதிக்
கோட்டுக்கு நீ நினைத்ததற்கு முன்னரே !
வேகம் என்றும் விவேகம் அல்ல தம்பி !
புரிந்து நடந்து கொள் தம்பி !
Natarajan.K.
07/11/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s