வாரம் ஒரு கவிதை …” இரண்டாவது கோப்பை “

இரண்டாவது  கோப்பை
======================
காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை
காப்பி …பின்னர் காலாற ஒரு பொடி
நடை வீட்டை சுற்றி சுற்றி !
தன் முகாமுக்கு திரும்பும் ஒரு படை
வீரன் துணிவுடன் எடுப்பேன் நான்
அன்றைய செய்தித்  தாளை தினமும்
என் நடைபயிற்சி முடிந்தவுடன் !
எத்தனை அதிர்வு செய்தி, எத்தனை
குற்ற செய்தி தினமும் ! அத்தனையும்
படிக்க மனதில் உறுதி வேண்டும் !
இரண்டாவது கோப்பை “ஸ்ட்ராங்” காப்பியும்
கையில் இருக்க வேண்டும் அப்போது !
இரண்டாவது கோப்பை காப்பிக்கு என்ன
அத்தனை சக்தி ! எதையும் தாங்கும்
என் இதயம் இரண்டாவது கோப்பை
காப்பி மட்டும் என் கையில் இருந்தால் !
முதல் கோப்பையில் இல்லாத தரமும்
சுவையும் இரண்டாவது கோப்பை காப்பியில்
எப்படி சாத்தியம் ?  அது என்ன ரகஸ்யம் ?
கேட்டேன் நான் என் சகதர்மிணியை !
பட்டென கிடைத்தது விடை என் கேள்விக்கு
முதல் கோப்பை காப்பி “நீங்களே   தயாரிக்கும்
காப்பி அவசரக் கோலத்தில் விடிந்தும் விடியாமலும் “!
இரண்டாவது கோப்பை காப்பி உருவாகுவது
என் மனைவியின் முதல் தர இயக்கத்தில் !
புரிந்து கொண்டேன்  நான் இரண்டாவது
கோப்பை காப்பியில்தான் முதல் தர
காப்பியை ருசிக்கிறேன் தினமும் என்று !
கோப்பை இரண்டாவதாக இருக்கலாம் ஆனால்
அதில் கிடைக்கும் காப்பி முதல் தரமாயிற்றே !
இந்த இரண்டாவது கோப்பை உண்மையில்
இருக்க வேண்டிய இடம் இரண்டாவது இடத்தில் அல்ல !
K.Natarajan
in http://www.dinamani.com dated 11/11/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s