வாரம் ஒரு கவிதை…..” தொலையாத வார்த்தைகள் “

தொலையாத வார்த்தைகள்
========================
தொல்லைகள் பல என் மண்ணின் விவசாயிக்கு
மழையே இல்லாமல் வாடும் அவன் பயிர்
ஒரு நேரம் ! சொல்லாமல் கொள்ளாமல்
கொட்டி தீர்க்கும் பெரு மழை ஒருநேரம் !
பெரு மழையுடன் ஊரையும் அவன் பயிரையும்
புரட்டிப் போட்டுவிடும் ஒரு சூறைக் காற்று
சில நேரம் !
பயிருக்கு உயிரான மழையே அவன் விளை
நிலத்துக்கு எமனாகவும் மாறும் ! வெட்டி
சாய்க்கும் மரங்களையும் …என் விவசாயி
கனவையும் சேர்த்து !
ஊருக்கே உணவு கொடுக்கும் என் விவசாயி
அவன் அடுத்த வேளை உணவுக்கு வரிசையில்
நிற்கும் அவல நிலை இன்று அவன்
குடும்பத்துடன் ஒரு நிவாரண முகாமில் !
இழந்தது அவன் பயிரை மட்டும் ..ஆனால்
தொலைக்கவில்லை ” மீண்டும் எழுவேன் நான்”
என்னும் நம்பிக்கையை !
அவன் தவிக்கும் இந்த நேரம் உதவிக் கரம்
நீட்டும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லவும்
மறப்பதில்லை அவன் !
எல்லாவற்றையும் தொலைத்து விட்டாலும் என்
மண்ணின் விவசாயி தொலைக்கவில்லை அவன்
நன்றி சொல்லும்  பண்பை !
மலை அளவோ திணை  அளவோ …நீட்டும்
உதவி கரங்கள் அத்தனைக்கும் தான்  ஒரு இளநீராவது
கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறானே இன்றும்
அவன் !
நன்றியும், உலகுக்கு உணவு அளிக்கும் பண்பும்
அவன் அகராதியில் என்றும்  நிலைத்து நிற்கும்
தொலையாத வார்த்தைகளோ !
Natarajan
in http://www.dinamani.com dated  25/11/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s