வாரம் ஒரு கவிதை ….” வன வாசம் “

 

வனவாசம்
=========
வனவாசம் சென்றான் ராமன் ஒரு சொல்லுக்கு
கட்டுப்பட்டு அன்று ! வனவாசம் ராமனுக்கு
ஆண்டு பதினான்கு !
இருக்கும் வனத்தை நாசம் செய்கிறான் மனிதன்
தினமும் இன்று …யார் சொல்லியும் கேட்காமல் !
வனம் எல்லாம் பாலைவனம் ஆகுது நம்
கண்  முன்னே ! வசிக்கும் இடம்  எல்லாம்
அடுக்குமாடி வனமாக மாறுது ஒரு நொடியில் !
வனத்தை அழித்து விட்டு வான் உயர
கட்டிடங்கள் கட்டி விட்டு மனிதன்
திட்டுகிறன் வானத்தைப் பார்த்து
ஏன் பொய்த்தாய் வானமே என்று !
பண வாசம் ஒன்று மட்டும் நுகரும்
மனிதனுக்கு  இந்த  மண்ணின் வாசமும்
வனத்தின் நேசமும் புரிய  எத்தனை ஆண்டு
தேவை அவனுக்கு  வனவாசம் ?
Natarajan
07/12/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s