வாரம் ஒரு கவிதை….” பதில் இங்கே ….கேள்வி எங்கே ? “

பதில் இங்கே …கேள்வி எங்கே ?
==============================
கேள்வி கேட்டால்தானே  கிடைக்கும் பதில்
எந்த கேள்விக்கும் இருக்குமே  ஒரு பதில்
தகவல் அறியும் சட்டம் இருக்கு இப்போ
கைவசம்…உனக்கு என்ன தகவல்
தேவை …சொல்லு தம்பி !கிடைக்கும்
உனக்கு நிச்சயம் ஒரு பதில் !
கேள்வி நான் கேட்கமாட்டேன் என்று
நீ ஒதுங்கினால் கேட்பதற்கு ஆள் இல்லை
நான் வைத்ததுதான்  சட்டம் என்று ஆட்டம்
போடுமே ஒரு பெரிய கூட்டம் !
கேட்பது உன் உரிமை மட்டும் அல்ல
கடமையும் கூட ! நீ கேட்க நினைப்பதை
கேட்டு விடு …உன் கேள்விக்கு பதிலும்
வாங்கி விடு ! இன்று நீ கேள்வி
கேட்காவிட்டால் , ஏன் கேட்கவில்லை அப்போதே கேள்வி
நீ என்று உன்னையே கேள்விக்குறியாக
மாற்றி ஒரு கூட்டம் சரமாரி கேள்விக்கணை
தொடுக்கும் உன் மேல் !
மறக்காதே கேள்வி கேட்க …விட்டுக்கொடுக்காதே
உன் கேள்வி கேட்கும் உரிமையை !
K.Natarajan
11/12/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s