வாரம் ஒரு கவிதை ….”தேநீர்ப் பொழுதுகள் “

தேநீர்ப் பொழுதுகள்
===================
காலை பொழுது மலர்ந்ததும் வேண்டும் தேநீர் சிலருக்கு
மாலையில் ஒரு “நொறுக்குடன் ” தேவை தேநீர் சிலருக்கு !
தேநீர் நேரம் என்று ஒன்று  பணிநேரத்தில் இருந்தாலும்
தேநீர் ஒன்றே தலையாய பணியாக மாறும் சிலருக்கு !
தேநீர் பொழுதை  ஒரு விருந்தாக மாற்றி வணிகம்
வர்த்தகம் செய்யும் வித்தகர்களும் உண்டு உலகில் !
தேநீரும் ஒரு “பொறையும்” மட்டுமே  உணவாக
மாறும் மூன்று வேளையும் ஒரு உழைப்பாளிக்கு !
தேநீர் பொழுது அவனுக்கு ஒரு பொழுது போக்கு
அல்ல ! தன் பொழுதை வீணாகப் போக்குபவனும்
அவன் இல்லை !
K.Natarajan
15/12/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s