வாரம் ஒரு கவிதை……புத்தாண்டு வாழ்த்துக்கள் …

புத்தாண்டு வாழ்த்துக்கள்
=======================
புது வருடம் பிறக்கிறது புத்தாண்டு வாழ்த்துக்களும்
பறக்கிறது எல்லோருக்கும் எல்லா வழியிலும் !
புத்தாண்டை வரவேற்க  புத்தாண்டுக் கொண்டாட்டமும்
களை கட்டுது முதல் நாள் இரவிலிருந்தே !
தெரிந்தோ தெரியாமலோ புரிந்தோ புரியாமலோ
ஹாப்பி நியூ இயர் …ஹாப்பி நியூ இயர்
என்று கீறல் விளைந்த இசைத் தட்டு போல
புது வருடத்தின் முதல் நாள் ஒலிக்குது
ஹாப்பி நியூ இயர் மந்திரம் நாள் முழுதும் !
சென்ற வருட தவறு திருத்தி சுற்றத்தின் குற்றம்
மறந்து புது வருடத்தில் புதியதாய் பிறக்க வேண்டாமா
நாம் ? பழைய கணக்கை மறந்து விட்டு புதுக் கணக்கு
தொடங்கவேண்டாமா கரும்புள்ளி எதுவும் இல்லாமல்
புது வருட ஆண்டு முதல் நாளில் நாம் ?
புதியதாய் நாம் பிறக்காமல் புத்தாண்டு வாழ்த்து
மட்டும் வெறும் வாயளவில் சொல்வதானால் என்ன
பயன் யாருக்கும்?
வரும் புத்தாண்டில் புதியதாய் பிறப்போம் நாம் !
புதிய பாரத விடியலுக்கு புது வழியும் காட்டுவோம்
நாம் !
காலையில் மலர்ந்து அந்திக் கருக்கலில் கருகாத
மலராக ஆண்டின் ஓவ்வொரு நாளும் மணம்
பரப்பும் புது மலராக இருக்க வேண்டும் நாம் சொல்லும்
வாழ்த்துக்கள்  !
கே.நடராஜன்
24/12/2018

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s