வாரம் ஒரு கவிதை ….” பொங்கலோ பொங்கல் ….”

பொங்கலோ பொங்கல் …
=====================
பொங்கலோ பொங்கல் …பொங்கல் வாழ்த்துக்கள்
பரிமாற்றம் ஓவ்வொரு ஆண்டும் …மாற்றம் இல்லை
எதுவும் இதில் !
பொங்கல் சிறப்பு  பட்டி மன்றம், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
பொங்கல் சிறப்பு சினிமா ,தொலைக்காட்சியில் !
பொங்கல்  திரைப்படமும் ஆட்டம் ஆர்ப்பாட்டம்
பால் அபிஷேகத்துடன் திரை அரங்கில் !
மாற்றம் இல்லை இதிலும் !
நம் வீட்டில் தங்கு தடை இன்றி பொங்கல் பொங்க
அரிசியும் கரும்பும்  இஞ்சியும் மஞ்சளும் வஞ்சனை ஏதும்
இன்றி நமக்கு கொடுக்கிறானே ஒரு மனிதன்
விவசாயி என்னும் மாமனிதன் ஆண்டு தவறாமல் !
யோசிக்க வேண்டும் நாம் இன்று …அந்த மாமனிதன்
வாழ்வில் மாற்றம் என்ன இருக்கு ஏற்றம் என்ன
அவனுக்கு என்று …ஏமாற்றம் ஒன்றே மிச்சம்
அவனுக்கு பொங்கல் நாளிலும் !
அவன் பெயர் சொல்லி நாம் வாழ்த்திக்கொள்கிறோம்
நம்மை நாமே பொங்கல் நன்னாளில் !
ஏமாற்றம் இல்லாத  நல்ல ஒரு மாற்றம் வேண்டுமா
வேண்டாமா அவனுக்கும் ?
பொங்கல் நம் வீட்டில் பொங்கும் நேரம் சொல்லவேண்டும்
நன்றி அவனுக்கு  நாம் !
அன்னமிடும் அவன் கைகள் என்றும் ஓங்கியே இருக்க
வேண்டும் !
அவன் கை  தாழ்ந்தால் தகர்ந்து தடுமாறும் அவன்
நம்பிக்கை ! கூடவே தடம் புரளும் நம் நகரத்து
சொகுசு பயணம் !
நமக்கு அன்னமிடும் அவனுக்கு நாமும் கை கொடுத்து
அவன் வாழ்விலும் ஏற்றமிகு மாற்றம் ஒன்று காண ஒரு
பாதை அமைத்துக் கொடுக்க வேண்டாமா நாம் ?
முதல் பொங்கல் வாழ்த்து அவனுக்கு நாம் சொல்லும்
வாழ்த்தாக இருக்கட்டும் ஐயா !
பொங்கலோ பொங்கல் என்று அவனும் மனம்
நிறைந்து நம்மை வாழ்த்த வேண்டும் அய்யா !
அவன் நம்மை வாழ்த்தும் வாழ்த்துதான் உண்மையான
பொங்கல் வாழ்த்து நமக்கு அய்யா !
நடராஜன்.K
12/01/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s