இரட்டையர்
++++++++++++
முகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள்
இரண்டு ….அவர் இரட்டையர் !
குழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும்
அவர் இருவரும் இரட்டையர் என்று !
புறம் ஒரு முகம் அகத்தில் வேறு முகம்
என்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு
முகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர்
சிலரும் உண்டே நம்மிடையே !
புரட்டி புரட்டிப் பேசும் இந்த “இரட்டியரை”
சொல்ல முடியுமா “இவர் இரட்டியர் ” என்று ?
Natarajan K in http://www.dinamani.com dated
22/05/2019