கண்டெடுப்பின் காலக் குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம் இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம் முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan in http://www.dinamani.com dated 01/06/2019
01/06/2019