வாரம் ஒரு கவிதை ….” மழை மேகம் “

 

மழை மேகம்
+++++++++++++
மழை வருதா என வானம் பார்க்கிறோம்
அந்த வானம் மட்டும் நீல வண்ணமாகவே  இருக்க
விழைகிறோம் !
ஆனால் மழை மட்டும் வேண்டும் நமக்கு
இது என்ன நியாயம் ?
மேகம் இல்லாமல் மழை ஏது ?
கரும் பட்டு உடுத்தி கரு மேகம்
திரள வேண்டாமா விண்ணில் ?
கருப்பு பட்டு ஆடை நம்மில் பலருக்குப்
பிடிக்காமல் இருக்கலாம் ….ஆனால்
நீல வானம் கரும் பட்டு தரித்து
மழை மேகத்தில் மறைய விழைகிறதே !
மழை மேகத்துக்கு கருப்பின் மேல்
அப்படி ஒரு மோகம் ! கரு மேக ஆடை
உடுத்தி  நீல வானம் சிந்தும் ஆனந்தக்
கண்ணீர்தான் இந்த மண்ணுக்கு
மழையோ !
கந்தசாமி  நடராஜன்  ….in http://www.dinmani.com dated
11/09/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s