மதுரை
+++++++
சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில்தான்
மதுரை தமிழ் இன்றும் மதுரத் தமிழே !
மாட வீதியும் சிகரம் தொடும் கோபுரங்களும்
கூடல் நகருக்கு ஒரு தனி முகவரி !
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பரமேஸ்வரன் பொற்பாதம் பட்ட இடம்
மதுரை !
அண்ணல் காந்தி அவர் முழு ஆடை துறந்து
கதர் ஆடைக்கு மாறிய நகரும் மதுரையே !
தேமதுரத் தமிழ் ஓசை அன்றும் இன்றும்
ஒலிக்கும் நகரும் மதுரையே !
மதுரையின் மதுரம் எல்லாம் மறந்து
மதுரை என்றாலே அடிதடி, வெட்டு குத்து ,
அடாவடி அரசியல் , போக்கிரித்தனம்
என்று வரிந்து கட்டி மதுரையைப்
படம் பிடித்துக் காட்டும் தமிழ் திரை
உலகத்துக்கு அப்படி என்ன வெறுப்பு
நம்ம மதுரை மீது ?
Kandaswamy Natarajan in http://www.dinamani.com dated 17th oct 2019