மௌன சிறை
++++++++++++++
பேச்சு வாக்கில் வாக்கு வாதம் முற்றும்
கணவன் மனைவிக்கு இடையில் !
நீ பேச வேண்டாம் இனிமேல் என்னுடன்
நானும் பேச மாட்டேன் உன்னுடன் இனி !
இது இடைக்கால தீர்வு !
மௌனம் காப்பர் இருவரும் …யார்
முதலில் பேசுவது என்னும் தயக்கம்
ஒரு பக்கம் ! யார் பெரியவர் என்னும்
அஹங்காரம் மறு பக்கம் !
மௌன மொழியால் இருவருக்குமே
சங்கடம் …சலிப்பு!
யார் முதலில் கண் சிமிட்டுவது என்னும்
குழப்பம் !
சத்தம் போட்டு பேசிய இருவருக்கும்
” சட்டப்படி ” சிறை தண்டனை …மௌன
சிறை !
குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டுமா இருக்காது?
சத்தமும் இருக்காது ஒரே வீட்டில் !
குற்றம் சற்றே மறந்து மௌனம் கலைத்தால்
கிடைக்கும் இருவருக்கும் விடுதலை
மௌன சிறைவாசத்தில் இருந்து !
கந்தசாமி நடராஜன்
30/11/2019