புத்தாண்டு சபதம்
++++++++++++++++
சபதம் எதுவும் எடுக்க மாட்டேன் இந்த வருடம்
இதுவே எனது சபதம் இந்த வருடம் !
அதைக் கிழிப்பேன் இதைக் கிழிப்பேன்
என்று நினைத்தேன் சென்ற ஆண்டு !
எதையும் உருப்படியாய் செய்து கிழிக்கவில்லை
நான் சென்ற ஆண்டு ! தவறாமல் நான்
கிழித்தது தினசரி நாட்காட்டி தாளை
மட்டுமே !
பிறகு எதற்கு புதிய சபதம் என்று ஒன்று ?
கந்தசாமி நடராஜன்
06/01/2020