வாரம் ஒரு கவிதை …பொங்கல் வாழ்த்து

 

 

       
 


வண்ண வண்ண அட்டைகள் 
எண்ணங்களின் சிதறல்கள் 
வாழ்த்து பரிமாற்றம் அன்பு உள்ளங்களுக்கு 
பொங்கலுக்கு பொங்கல் ! 

ஒரு இல்லத்துக்கு அட்டை எத்தனை 
வரவு என்று கணக்கு வேறு ! 
பொங்கல் வாழ்த்து அட்டைக்கு நன்றி 
நவில அஞ்சல் அட்டையும் உண்டு !

கை பட எழுதிய இரண்டு அட்டைகளும் 
இன்று தேடினாலும்  கிடைக்காத பொக்கிஷம் !
அது ஒரு கனாக் காலம் !

காலத்தின் கோலம் இன்று ” ஹாப்பி 
பொங்கல் ” என்று  எந்திர மயமான 
குறும் செய்தி எல்லோருக்கும் அலைபேசியில் !

மனம் திறந்து சொல்கிறேன் நான் இன்று 
நெஞ்சம்  நிறைந்த வாழ்த்துக்களை தொலைத்து 
விட்டு நிற்கிறோம் என்று ! 

சொல்லுவோம் வாழ்த்துக்களை மனம் 
நிறைய …மின் அஞ்சல் மூலமாவது !
வாழ்த்து பெறுபவரின் நெஞ்சம் குளிரும் 
வாழ்த்தும் நம் மனமும் நிறையும் !

பொங்கலோ பொங்கல் ! 

கந்தசாமி நடராஜன்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s