வீட்டுக்கு ஓரே ஒரு தொலைபேசி
ராஜா மாதிரி அமர்ந்திருக்கும் அதன்
சிம்மாசனத்தில் …அது ஒரு காலம் !
அது சிணுங்கினால் அவ்வளவு பேரும்
ஓடுவார் அதன் சிம்மாசனத்துக்கு !
ராஜ மரியாதை அதற்கு !
ஒரு வீட்டில் எல்லோர் கையிலும்
ஒரு கை பேசி இப்போது !
எங்கே என் கை பேசி…ஒரு
தேடல் காலையில் எழுந்தவுடனே !
எங்கேயும் விழுந்து கிடக்கும் வீட்டின்
ஒரு மூலையில் … எங்கே என் கை
பேசி ..எங்கே என் கை பேசி
தேடும் வேட்டை தொடரும் நாள் முழுதும் !
கை பேசி இப்போது குழந்தை மாதிரி
எடுப்பார் கை பிள்ளையாக !
அது சிணுங்காவிட்டாலும் அதைத்
தட்டிக் கொடுக்க வேண்டும் …தடவிக்
கொடுக்கவேண்டும் ….கையில்
இல்லாத சமயம் தேட வேண்டும் எங்கே
என் கை பேசி என்று ! கை பேசி இல்லாத
கை ஆயிரத்தில் ஒன்று இன்று !
கந்தசாமி நடராஜன்
22/01/2020