கவிதையும் கொரானாவும் …
+++++++++++++++++++++++
எழுதி எழுதிப் பார்க்கிறேன்
அழுகை தான் வருதே தவிர
ஒரு கவிதையும் பிறக்கவில்லை
இந்த வாரம் !
வாரம் ஒரு கவிதை ஒரு பாரமாகத்
தெரியுது இந்த வாரம் !
அரண்டு கிடைக்கும் உலகில் நான் மட்டுமா
என் வீட்டு குவாரண்டைனில் ?
இல்லை என் கவிதையும் சேர்ந்தா ?
கந்தசாமி நடராஜன்