” என் அப்பன் உன் சித்தம் “

சஷ்டி கவசம் என்னைக்  காக்கும் கவசம் 
முருகா ! இஷ்ட தெய்வம் நீ என்னை  
கஷ்டங்களில் இருந்து காக்கும் தெய்வம் 
அய்யா !

எனக்கு ஒரு கஷ்டம் அய்யா இன்று !
இஷ்டம் போல ஒரு கூட்டம் உன் 
கவசமதை விவஸ்தை இல்லாமல் 
அலசும் அவலம் பார்த்து மனசு 
நொறுங்கிக்  கிடக்கிறேன்  நான் !

எத்தனை நாள் நான் பொறுப்பது இதை 
முருகா?  விவஸ்தை இல்லா ஒரு 
அசுரர் கூட்டம் பாய்ச்சுகிறது என் காதில் நாராசம் ! 

அந்த சூரனையே சம்ஹாரம் செய்த நீ  
இந்த அசுரர் கூட்டத்தை சம்ஹாரம் செய்ய 
ஏன் இன்னும் தாமதம் ? 

இன்னும் ஏன் மௌனம் காக்கிறாய் முருகா ?
உன் கவசம் படிக்காதவரும்  இனி 
படிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று  நீ விளையாடும் 
திருவிளையாட்டா இது …? அதையாவது 
எனக்கு மட்டும் சொல்லி விடு முருகா !

சொல்லு முருகா ! நீ மௌனம் 
காப்பது எதனால் என்று எனக்கு !
சொல்லி என் மனக் கஷ்டத்தை நீக்கி 
விடு முருகா ! 

தினமும் உன் கவசம் படிக்கும் என்னை 
வந்து வணங்க வேண்டாம் மாற்றலர் எல்லாம் !
என் அப்பனைத் தூற்றும் மாற்றலரும் 
உன் அருளால் உன் தாள் பணிந்து 
உன்னை வணங்க வேண்டும் ஒரு நாள்  முருகா !
நான் சொல்வதை சொல்லி விட்டேன் 
முருகா … இனி என் அப்பன் 
உன் சித்தம் !

கந்தசாமி நடராஜன்

6 thoughts on “” என் அப்பன் உன் சித்தம் “

 1. A V Ramanathan July 26, 2020 / 2:30 pm

  அருமையான பக்தி மணம் கமழும் கவிதை. பாராட்டுக்கள் சார்!

  ஏ வி ராமநாதன்

  • natarajan July 26, 2020 / 2:34 pm

   Thanks a lot…Mr Ramanathan .

 2. Seshambal July 26, 2020 / 4:58 pm

  🙏🏻 Reflects the views of thousands of people. Thank you

 3. Sampathkumar k July 30, 2020 / 7:04 am

  Devotees feeling are echoed in this kavithai. Lord Muruga is listening and your prayer will be answered.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s