வாரம் ஒரு கவிதை

போட வேண்டும் ஒரு கும்பிடு !


காலை இளம் காற்று! மேகம் சூழ்ந்த 
வானம் !
விறு விறு என நடை போட்டேன் 
சுறு சுறுப்பும் நடை பயின்றது என் கூட !

வானம் பார்த்தேன்! கதிரவனுக்கு
ஒரு வணக்கம் சொல்லலாம் என்று 
நினைத்து !

நான் பார்க்கும் சமயம் எல்லாம் 
கதிரவன் மேகத்தின் மேலாடையில் 
மறைத்துக் கொண்டான் தன் முகத்தை !

எனக்கு முகம் காட்ட மாட்டேன் 
என்று சொல்லாமல் சொல்லுகிறானா ?

முகக் கவசம் நான் அணியவில்லை 
அதுதான் காரணமோ கதிரவன் 
அவன் முகம் காட்டாமல் மேகத்தில் 
மறைந்ததற்கு !

எனக்கும் உனக்கும்  இடைவெளி 
எவ்வளவு இருந்தாலும் முகக் 
கவசம் கட்டாயம் உனக்கு என்று 
சொல்லுகிறானோ கதிரவன் ?

நாளை மறக்காமல் முகக் கவசம் 
அணிந்து போட வேண்டும் ஒரு 
கும்பிடு அந்த  காலை இளம் சூரியனுக்கு !

கந்தசாமி நடராஜன் 
13/11/2020 

2 thoughts on “வாரம் ஒரு கவிதை

  1. Thudhu November 16, 2020 / 11:46 am

    தங்களுடைய கவிதை மிக அழகானது என்னை வருட செய்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் கவிதை பயணம் மேலும் தொடரட்டும்

    • natarajan November 16, 2020 / 7:12 am

      மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s