என் கவலை எனக்கு …!!!
முகத்தில் ஒரு சோகம்… கவலையின் ரேகை
என்ன கவலை எனக்கு ?
கோவிட் 19 பயம் விடுவது எப்போது
இல்லை தடுப்பு ஊசி எப்போது எனக்கு
கிட்டும் என்றா ?
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்
நான் எப்போது வெளியில் சுற்றப்
போகிறேன் என்றா ?
வெளி ஊருக்கு எப்போது போகப்போகிறேன் என்றா ?
முகமூடி இல்லாமல் வெளிக் காற்றை எப்போது
சுவாசிக்கப் போகிறேன் என்றா?
இல்லை இல்லை … பின் என்னதான் எனக்கு
கவலை ? நாட்டு எல்லையில் பதட்டம் என்று
பயமா ? டில்லியில் உழவர் பிரச்சனை எப்போது
தீரும் என்றா ?
இல்லை இல்லை ! தேர்தலில் எந்த கட்சி
ஜெயிக்கும் என்றா ?
இல்லை இல்லை !
பின் என்ன என் பிரச்சனை ? மண்ணில் நிற்கும்
விமானம் எல்லாம் மீண்டும் எப்போது பறக்க
ஆரம்பிக்கும் என்றா ! நாட்டின் பொருளாதாரம்
மீண்டும் எப்போது நிமிரும் என்று யோசனையா ?
இல்லை இல்லை …கவலை அது இல்லை !
சொன்னால் சிரிக்க கூடாது !
என் கவலை எல்லாம் வாட்ஸப் பிரச்சனைதான் !
அந்த செயலி முடங்கி விட்டால் செயல் இழந்து
போவது நான் மட்டுமா? நீங்களும் தானே !
அதுதான் கவலை இப்போ எனக்கு !
கந்தசாமி நடராஜன்
23/01/2021