இப்போ என்ன அவசரம் எனக்கு !
கண்டவர் விண்டிலர் விண்டவர்
கண்டிலர்
விண்வெளி பயணம் செல்ல
தேவை பல கோடி !
விண்வெளி விண்ணுலகு இல்லையே
பிறகு ஏன் இத்தனை ஆரவாரம் ?
காலம் வரும் நேரம் ஒரு பைசா
செலவு இல்லாமல் என்னை விண்ணுலகு
கூட்டி செல்ல வருவான் காலன் !
அவன் வரும் வரை காத்திருப்பேன்
நான் விண்ணுலகு காண !
இப்போ எனக்கு என்ன அவசரம் ?
கந்தசாமி நடராஜன்
11/07/2021